TAMIL MIXER
EDUCATION.ன்
புதுவை செய்திகள்
ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்களுக்கு
உதவித்
தொகை
ரூ.20
ஆயிரமாக
உயர்வு
ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்களுக்கு
உதவித்
தொகை
ரூ.5
ஆயிரத்தில்
இருந்து
20 ஆயிரமாக
உயர்த்தப்படும்
என
முதல்வர்
ரங்கசாமி
அறிவித்துள்ளார்.
மாகியில் உள்ள
ஆயுர்வேத
மருத்துவக்
கல்லுாரி
பட்டமளிப்பு
விழா
நேற்று
முன்தினம்
நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
கொரோனா காலத்தில் ஆயுர்வேத சிகிச்சையை பெரும்பாலான பொதுமக்கள் விரும்பினர். இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்கள்
பலர்
ஆயுர்வேத
சிகிச்சையால்
குணமடைந்தனர்.
ஆயுர்வேத சிகிச்சையானது
வயதானவர்களுக்கு
மிகவும்
தேவையானதாக
உள்ளது.
அலோபதி மருத்துவம் நோயை குணப்படுத்துவதாக
உள்ளது.
ஆனால்,
ஆயுர்வேத
சிகிச்சை
நோயை
குணப்படுத்துவதோடு,
மீண்டும்
வராமல்
தடுக்கிறது.
ஆரம்ப காலத்தில் நானும் ஆயுர்வேத சிகிச்சையில்
நம்பிக்கை
இல்லாமல்
இருந்தேன்.
ஆனால்
கொரோனாவில்
பாதிக்கப்பட்டு
சிகிச்சை
பெற்ற
காலத்தில்
நான்கூட
ஆயுர்வேத
சிகிச்சை
பெற்றேன்.
மேலும்
கொரோனா
காலத்தில்
பெரும்பாலானோர்
ஆயுர்வேத
சிகிச்சையால்
பலன்
அடைந்து
நோயிலிருந்து
குணமடைந்தனர்.
மேலும் கொரோனா பாதிப்பு காலத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆயுர்வேத சிகிச்சையில்
உள்ள
கஷாயம்
வழங்கப்பட்டது.
சித்தர்களால்
செயல்படுத்தப்பட்ட
ஆயுர்வேத
சிகிச்சையில்,
உணவு
முறைக்கும்
முக்கிய
பங்கு
அளிக்கப்படுகிறது.
ஆயுர்வேதம் படித்தவர்களும்
மருத்துவர்கள்தான்.
ஆயுர்வேத
சிகிச்சைக்கான
கல்வியைப்
படித்து
முடித்தவர்கள்
பயிற்சி
காலத்தில்
உதவித்தொகையாக
ரூ.5,000
வழங்கப்படுகிறது.
அதனை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த
அரசு
மருத்துவக்
கல்வி
மாணவர்களுக்கான
உதவித்
தொகையை
உரிய
காலத்தில்
கிடைக்கும்
வகையில்
நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள்
தங்கள்
பணியை,
மக்களுக்கு
செய்யும்
சேவையாக
கருதி
இன்னும்
சிறப்பாக
மேற்கொள்ள
வேண்டும்.
ஆயுர்வேத
கல்லுாரிக்கு
கூடுதல்
வசதிகள்
செய்துதரப்பட்டுள்ளது.