மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மித கன மழை பெய்து வருகின்றது.
வேகமாக வீசக்கூடிய காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்வது, மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுவது, வீடுகள் நொறுங்கி விழுவது என ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. தமிழக அரசு மாண்டஸ் புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (10.12.2022)பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்:
1. திருவண்ணாமலை
2. சென்னை
3. நீலகிரி
4. தர்மபுரி
5. கிருஷ்ணகிரி
6. சேலம்
7. வேலூர்
8. காஞ்சிபுரம்
9.திருவள்ளூர்
10.செங்கல்பட்டு
11.கடலூர்
12.விழுப்புரம்
13.ராணிப்பேட்டை
14.கள்ளக்குறிச்சி
15. திருப்பத்தூர்
16. கொடைக்கானல்- சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு.