பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு போட்டித் தோவுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்எஸ்சி, சிஎச்எஸ்எல் என்னும் தோவுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி- 2 முதன்மை தோவுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (டிச.16) முதல் நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பதிவுசெய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.