Sunday, December 22, 2024
HomeBlog8 AM Headlines: (17.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்
- Advertisment -

8 AM Headlines: (17.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

8 AM Headlines: (17.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

தமிழ்நாடு:

  • கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
  • காவிரியில் தண்ணீர் திறக்க கோரி மத்திய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் மனு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
  • தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியோடு இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் – முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு
  • விநாயகர் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது; பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற தகுதியானவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – நாளை முதல் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
  • தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை
  • ஆடு வளர்ப்பு சிறப்பு பயிற்சி – 50% மானியம் பெறலாம்! – முழு விவரம்

இந்தியா:

  • ’இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து – காங்கிரஸ் அறிவிப்பு
  • பொது நலன் சாராத அரசியல் சாசன விவகாரங்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாகவும் எளிய மக்களின் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதில்லை என்றும் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • மணிப்பூர் கலவரத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் கோக்கர்நாக் பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை விரட்ட ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
  • நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.
  • டெல்லியில் 120 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
  • சந்திரயான் – 3 வினாடி வினா போட்டி (ரூ. 1 லட்சம் பரிசு) – முழு விவரம்

உலகம்:

  • துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது
  • நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோயிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி வகை நாய்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டு உள்ளதாக தகவல்
  • அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் – இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி

விளையாட்டு:

  • ஆசிய கோப்பை 2023 போட்டியில் இன்று இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
  • டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
  • ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தீக்சனா பங்கேற்க மாட்டார் – இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
  • ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள் (18-09-2023)

Job Details Link
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் ரூ. 15,000 சம்பளத்தில் JRF வேலைவாய்ப்பு Apply Here
MHRD NATS – FCI நிறுவனத்தில் Graduate Apprenticeship வேலைவாய்ப்பு Apply Here
JIPMER ஆணையத்தில் Assistant, Associate வேலைவாய்ப்பு Apply Here
மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில் ஊர்தி ஓட்டுநர்‌ வேலைவாய்ப்பு Apply Here
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் Consultant வேலைவாய்ப்பு Apply Here
ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை செப்.18 விண்ணப்பிக்க கடைசி நாள் Apply Here
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு Apply Here
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு Apply Here
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 276 புதிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு! Apply Here
HAL நிறுவனத்தில் மேனேஜர், பைனான்ஸ் ஆபிஸர், என்ஜினீயர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு! Apply Here
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! Apply Here
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! Apply Here
CSIR ஆணையத்தில் JRF, Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- Apply Here
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -