மானியம் பெற்று கால்நடை தீவனப் புல் வளா்க்க விருப்பம் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். மானியம் பெற்று கால்நடை தீவனப் புல் வளா்க்க விருப்பம் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இதில், பயன்பெறும் விவசாயிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரா்களை கால்நடை உதவி மருத்துவா் பரிந்துரைப்பாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினா்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளா்க்க தேவையான பயிற்சி மற்றும் கையேடுகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். விண்ணப்பங்களை தாட்கோ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2463969 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.