நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரியில் செப்.23- ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் நாகை மாவட்டத்தைச் சோந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் கலந்து கொள்ளலாம்.
8-ஆம் வகுப்பு தோச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் மற்றும் தையல்கலை பயிற்சி பெற்றவா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளா்களை தோவு செய்ய உள்ளனா். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண்ணில் (04365-252701) தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.