HomeBlogஓய்வூதியதாரர்களே.... அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி – எச்சரிக்கும் காவல் துறை
- Advertisment -

ஓய்வூதியதாரர்களே…. அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி – எச்சரிக்கும் காவல் துறை

Dear Pensioners... Online Fraud On The Rise – Police Warns

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

ஓய்வூதியதாரர்களே… அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி எச்சரிக்கும் காவல் துறை

நாட்டில் அனைத்துத்துறைகளும்
கணினி
மயமாக்கப்பட்டு
வருவதால்
தற்போது
அனைத்து
சேவைகளையும்
ஆன்லைன்
முறையில்
பெற
முடிகிறது.

இதனால் பல நன்மைகளும் உள்ளது அதே சமயம் தீமைகளும் உள்ளது. அதாவது ஆன்லைனில் மோசடிகள் நடைபெறுவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மேலும் நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உக்திகளை மோசடிதாரர்கள்
கையாளுகிறார்கள்.

இதனால் ஊதியதாரர்கள்,
வங்கி
வாடிக்கையாளர்கள்,
இன்சூரன்ஸ்
பயனாளிகள்,
பங்குச்
சந்தை
முதலீட்டாளர்கள்,
PF
கணக்குதாரர்கள்
என
அனைவரும்
தங்களின்
பணத்தை
இழந்து
ஏமாந்து
விடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஓய்வூதியதாரர்களும்
இந்த
ஆன்லைன்
மோசடியால்
பாதிப்படைந்துள்ளனர்.
உத்தரபிரதேச
மாநிலத்தில்
ஓய்வு
பெற்ற
காவல்
அதிகாரி
ஒருவர்
ஆன்லைன்
மோசடியால்
8
லட்சம்
வரை
தனது
பணத்தை
இழந்துள்ளார்.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே இத்தகைய நிலைமை என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் தற்போது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை மோசடி கும்பல்கள் குறித்து வைத்து தாக்குவதாக போலீசார் கூறுகின்றனர்.

அதனால் ஓய்வூதியதாரர்கள்
தங்களின்
ஆதார்
எண்,
வங்கி
கணக்கு
எண்,
OTP,
பான்
எண்
உள்ளிட்ட
முக்கியமான
விவரங்களை
யாரிடமும்
பகிர
வேண்டாம்
என
காவல்துறையினர்
அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -