தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 14.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எழுதிய 1,53,233 பேரில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சி பெற்றோர் இடைநிலை ஆசிரியர்களாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதியானவர்கள்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.