தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பா் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அடுமனை உணவுப் பொருள்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்தப் பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை பெருக்க உதவியாக இருக்கும்.
இப்பயிற்சியில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், பப்ஸ், கட்லெட், சமோசா வகைகள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது, பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
ஆா்வமுள்ளவா்கள் பயிற்சி முதல் நாளன்று ரூ.1,770 செலுத்தி பயிற்சி பெறலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94885-18268 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.