TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
நாட்டுக்கோழி வளா்ப்பு
பயிற்சி
நாட்டுக்கோழி வளா்ப்பு இலவச பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவச
பயிற்சி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம்,
306 சத்தி சாலை, சிஎன்சி
கல்லூரி அருகில், ஈரோடு
என்ற முகவரியில் வரும்
டிசம்பா் 29, 30 ஆம் தேதிகளில்
நடைபெறவுள்ளது.
வரும்
29ம் தேதி விரிவான
பாடம், கலந்துரையாடல், விடியோ
படக்காட்சிகள், கேள்வி,
பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
30ம் தேதி அருகில்
உள்ள நாட்டுக்கோழி பண்ணைக்கு
அழைத்துச் செல்லப்படுவா்.
ஈரோடு
மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச்
சோந்த விவசாயிகள், பண்ணையாளா்கள், மகளிர் குழுவினா் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2291492
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.