மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.22) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிறுகனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்.22ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், ஆவாரவள்ளி, சிறுகனூா் , திருப்பட்டூா், சி.ஆா்.பாளையம், எம்.ஆா். பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், பி.கே.அகரம், ரெட்டி மாங்குடி, ஜி.கே. பாா்க், கொளக்குடி, மற்றும் கண்ணாக்குடி, புஞ்சை சங்கேந்தி, குமுளூா், தச்சன் குறிச்சி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பொள்ளாச்சி:பொள்ளாச்சி- மீன்கரைரோடு விரிவாக்க பணிக்காக, கணபதிபாளையம், கோவிந்தாபுரம் பகுதியில், நாளை, 21ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.பொள்ளாச்சி – மீன்கரை ரோட்டில், சாலை மேம்பாட்டு திட்டத்தில் விரிவாக்கப்பணி நடக்கிறது.
தேவையான இடங்களில் ரோடு விரிவுபடுத்தப்படுகிறது.இதற்காக, பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் உள்ள கணபதிபாளையம் மின் பாதையில், ரோடு விரிவாக்க பணிகள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே, நாளை, 21ம் தேதி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட கணபதிபாளையம், பெரியார் நகர், காந்தி ஆசிரமம், கோவிந்தாபுரம், பாப்பாத்திபாளையம் ஆகிய பகுதிகளில், மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.இத்தகவலை, பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா அறிவித்துள்ளார்.
(காலை 10:00 – மாலை 5:00 மணி)எஸ்.புதுார், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, வேளார் தெரு, காசியாபிள்ளை நகர், சந்திவீரன் கூடம், முத்தையா காலனி, அம்பேத்கர் நகர்.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா்,நூரோலை, சேரதாங்கல், பழையசிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், மடம், வீரசோழபுரம், பாளையம், கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.