HomeBlogIncome Tax Return படிவம் 10 B & 10 BB சமர்ப்பிப்பதற்கு செப்.30 வரை...
- Advertisment -

Income Tax Return படிவம் 10 B & 10 BB சமர்ப்பிப்பதற்கு செப்.30 வரை காலக்கெடு!

Income Tax Return படிவம் 10 B & 10 BB சமர்ப்பிப்பதற்கு செப்.30 வரை காலக்கெடு!

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 10 பி / 10 பிபி மற்றும் படிவம் ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-23 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10 பி / படிவம் 10 பிபியில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2023 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இப்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கையை ஐடிஆர்-7 படிவத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2023-ல் இருந்து 30.11.2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. 225/177/2023/ITA-II-ல் 16/2023-ஆம் எண் கொண்ட சிபிடிடி சுற்றறிக்கை இன்று (18.09.2023) வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -