வெளிநாட்டு உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கு, ‘தாட்கோ’ வாயிலாக இலவச பயிற்சி அளிக்கப்படுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்கான, நான்கு வகையான போட்டித்தேர்வுகள் அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறியவர்கள், ‘தாட்கோ’ திட்டத்தில், இத்தகைய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி பெறலாம்.பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாத, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவர்கள், இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவோர், தாம் விரும்பும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மேல்படிப்பை தொடரும் வாய்ப்பை பெறலாம்.
தகுதியானவர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தின் 5வது தளத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை, 9445029552, 0421-2971112 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.