தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் பிப்ரவரி 15, 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் பிப்ரவரி 15, 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு குறித்து பிப்ரவரி 15 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து பிப்ரவரி 21 ஆம் தேதியும், கறவை மாடு வளா்ப்பு குறித்து 22 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. பயிற்சியில் பங்குபெறுவோா் ஆதாா் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362 – 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.