தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த, 18 வயது முதல், 30 வயது வரை உள்ளவர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையில் அழகு கலை, சிகை அலங்காரம் உள்ளிட்ட, 45 பயிற்சிகள் சென்னையில் வழங்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு, ஆரம்ப கால ஊதியமாக, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், தாட்கோ இணையதளமான, www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு தர்மபுரி எஸ்.வி., ரோட்டிலுள்ள தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.