ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணாக்கா்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்படும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணாக்கா்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்படும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகின்றன. அதில், பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற பயிற்சியினை வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும்.
இதற்கான செலவினங்கள் தாட்கோவால் வழங்கப்படும். இதில் பெற்றி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். மேற்கண்ட திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ http://tahdco.com/ இணையதளமான இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.