சென்னை: ஜே.இ.இ. ஏப்ரல் மாத தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.
பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஐ.ஐ.டி.
– ஐ.ஐ.ஐ.டி. – என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேர ஜே.இ.இ. நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதான தேர்வின் முதல் கட்ட தேர்வு ஜன. 24 முதல் 31 வரை நடந்தது.
இதையடுத்து ஜே.இ.இ. இரண்டாம் கட்ட பிரதான தேர்வு ஏப். 6 8 10 11 12ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. மார்ச் 12 இரவு 9:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை மார்ச் 12 இரவு 11:50 மணிக்குள் செலுத்த வேண்டும் என ஜே.இ.இ. தேர்வு குழு அறிவித்துள்ளது. விபரங்களை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.