50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
TNPSC மற்றும் பிற அரசு தேர்வுகளுக்கான 50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் தேடுகிறீர்களா? இங்கு நீங்கள் தேடியுள்ள பொருள் இலக்கணம் சார்ந்த முக்கிய வினா-விடைகள் தொகுப்பை பெறலாம்!
இதில், 50+ பொருள் இலக்கணம் பற்றிய முக்கிய வினா-விடைகள் உள்ளன. TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான உதவியாக இந்த தொகுப்பு மிக முக்கியமானது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள்:
- 📝 50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள்
- 📚 எளிமையான விளக்கங்களுடன்
- 🎯 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உகந்த பயிற்சிகள்
- 🏆 தேர்வு வெற்றி பெற உதவிய பயிற்சிகள்
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
விடைகள் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது
1. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது?
அ) அகத்திணை ஆ) புறத்திணை
இ) அ மற்றும் ஆ ஈ) கைக்கிளை
விடை: அ) அகத்திணை
2. பொருத்துக
1) குறிஞ்சி – காடும் காடுசார்ந்த இடமும்
2) முல்லை – மலையம் மலைசார்ந்த இடமும்
3) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
4) நெய்தல் – சுரமும் சுரம் சார்ந்த இடமும்
5) பாலை – கடலும் கடல் சார்ந்த இடமும்
அ) 12345 ஆ) 21354 இ) 51234 ஈ) 41352
விடை: ஆ) 21354
3. நிலமும் பொழுதும் _ எனப்படும்
அ) முதற்பொருள் ஆ) கருப்பொருள்
இ) உரிப்பொருள் ஈ) இவை ழூன்றும்
விடை: அ) முதற்பொருள்
4. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
விடை: ஆ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
5. கூற்றினை ஆராய்க
1) ஓராண்டின் ஆறு கூறுகள் – பெரும்பொழுது
2) ஒரு வாரத்தின் ஆறு கூறுகள் – சிறுபொழுது
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: அ) 1 மட்டும் சரி
6. பொருத்துக
1) காலை 6 மணி முதல் 10 வரை – நண்பகல்
2) மாலை 6 மணி முதல் இரவு 10 வரை – காலை
3) காலை 10 மணி முதல் 2 வரை – மாலை
அ) 123 ஆ) 231 இ) 312 ஈ) 213
விடை: ஆ) 231
7. பொருத்துக
1) வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
2) எற்பாடு – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
3) யாமம் – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
அ) 123 ஆ) 132 இ) 231 ஈ) 312
விடை: ஆ) 132
8. கார்காலம்:-
அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) மாசி, பங்குனி
இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஆனி, ஆடி
விடை: இ) ஆவணி, புரட்டாசி
9. முதுவேனிற்காலம்:-
அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) மாசி, பங்குனி
இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஆனி, ஆடி
விடை: ஈ) ஆனி, ஆடி
10. பின்பனிக்காலம்:-
அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) மாசி, பங்குனி
இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஆனி, ஆடி
விடை: ஆ) மாசி, பங்குனி
11. பொருத்துக:-
1) குளிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை
2) முன்பனிக்காலம் – மார்கழி, தை
3) இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி
அ) 123 ஆ) 132 இ) 213 ஈ) 312
விடை: அ) 123
12. மருதம் நிலத்திற்குரிய சிறுபொழுது?
அ) யாமம் ஆ) மாலை இ) வைகறை ஈ) எற்பாடு
விடை: இ) வைகறை
13. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
அ) இளவேனில் ஆ) முதுவேனில்
இ) பின்பனி ஈ) இவை ழூன்றும்
விடை: இவை ழூன்றும்
14. நிலத்திற்குரிய சிறுபொழுதினை பொருத்துக
1) குறிஞ்சி – மாலை
2) முல்லை – எற்பாடு
3) நெய்தல் – யாமம்
4) பாலை – நண்பகல்
அ) 1234 ஆ) 3124 இ) 4123 ஈ) 3214
விடை: ஆ) 3124
15. பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு:
அ) ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவை கருப்பொருள்கள்
ஆ) ‘எல்’ என்றால் ஞாயிறு, ‘பாடு’ என்றால் சுரியன் உதிக்கும் நேரம்
இ) நிலமும் பொழுதும் உரிப்பொருள்
ஈ) பொழுது 3 வகைப்படும்
விடை: அ) ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவை கருப்பொருள்கள்
16. குறிஞ்சி நிலத்திற்குரிய பறை:
அ) ஏறு கோட்பறை ஆ) மணமுழா
இ) தொண்டகம் ஈ) துடி
விடை: இ) தொண்டகம்
17. பாலை நிலத்திற்குரிய பண் _
அ) குறிஞ்சிப்பண் ஆ) முல்லைப்பண்
இ) செவ்வழிப்பண் ஈ) பஞ்சுரப்பண்
விடை: ஈ) பஞ்சுரப்பண்
18. பொருத்துக
1) குறிஞ்சி – அருவிநீர், சுனைநீர்
2) முல்லை – வற்றிய நீர்
3) நெய்தல் – காட்டாறு
4) பாலை – மணற்கிணறு
அ) 2314 ஆ) 1423 இ) 1342 ஈ) 3142
விடை: இ) 1342
19. பாலை நிலத்திற்குரிய மரம் _
அ) கொன்றை, காயா ஆ) காஞ்சி, மருதம்
இ) புன்னை, ஞாழல் ஈ) இலுப்பை, பாலை
விடை: ஈ) இலுப்பை, பாலை
20. பாலை நிலத்திற்குரிய ஊர் _
அ) சிறுக்குடி ஆ) பாடி, சேரி
இ) பட்டினம், பாக்கம் ஈ) குறும்பு
விடை: ஈ) குறும்பு
21. நெய்தல் நிலத்திற்குரிய மரம் _
அ) அகில், வேங்கை ஆ) கொன்றை, காயா
இ) புன்னை, ஞாழல் ஈ) இலுப்பை, பாலை
விடை: இ) புன்னை, ஞாழல்
22. பொருத்துக
1) குறிஞ்சி – வருணன்
2) முல்லை – முருகன்
3) மருதம் – திருமால்
4) நெய்தல் – இந்திரன்
அ) 2314 ஆ) 2341 இ) 1234 ஈ) 1432
விடை: ஆ) 2341
23. பாலை நிலத்திற்குரிய மக்கள்
அ) வெற்பன் ஆ) தோன்றல்
இ) ஊரன் ஈ) எயினர்
விடை: ஈ) எயினர்
24. மருதம் நிலத்திற்குரிய உணவு _
அ) மலைநெல், தினை ஆ) வரகு, சாமை
இ) செந்நெல், வெண்ணெய் ஈ) மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
விடை: இ) செந்நெல், வெண்ணெய்
25. முல்லை நிலத்திற்குகுரிய ஊர் _
அ) சிறுகுடி ஆ) பாடி, சேரி
இ) பேருர், மூதூர் ஈ) பட்டினம்
விடை: ஆ) பாடி, சேரி
26. பொருத்துக
1) குறிஞ்சி – சிறுகுடி
2) முல்லை – பாடி,சேரி
3) மருதம் – பட்டினம்
4) நெய்தல் – பேருர்,மூதூர்
அ) 1234 ஆ) 1243 இ) 4123 ஈ) 3142
விடை: ஆ) 1243
27. பொருத்துக
1) குறிஞ்சி – ஏறு தழுவுதல்
2) முல்லை – தேனெடுத்தல்
3) மருதம் – நெல்லரித்தல்
4) நெய்தல் – மீன்பிடித்தல்
அ) 4123 ஆ) 2134 இ) 3142 ஈ) 2143
விடை: ஆ) 2134
28. நெய்தல் நிலத்திற்குரிய யாழ் _
அ) குறிஞ்சி யாழ் ஆ) முல்லை யாழ்
இ) மருத யாழ் ஈ) விளரி யாழ்
விடை: ஈ) விளரி யாழ்
29. பாலை நிலத்திற்குரிய பறை _
அ) தொண்டகம் ஆ) ஏறுகோட்டறை
இ) துடி ஈ) மணமுழா
விடை: இ) துடி
30. அகத்திணையின் வகைகள் _
அ) 5 ஆ) 9 இ) 12 ஈ) 15
விடை: அ) 5
31. புறத்திணையின் வகைகள் _
அ) 5 ஆ) 9 இ) 12 ஈ) 15
விடை: இ) 12
32. ஆநிரை கவர்தல் _ திணை
அ) வெட்சித் திணை ஆ) கரந்தைத் திணை
இ) உழிஞைத் திணை ஈ) தும்பைத் திணை
விடை: அ) வெட்சித் திணை
33. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி போருக்குச் செல்வது _ திணை
அ) கரந்தை ஆ) வஞ்சி இ) உழிஞை ஈ) நொச்சி
விடை: ஆ) வஞ்சி
34. முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பு+வைச் சு+டி உள்ளிருந்தே போரிடுவது _ திணை
அ) கரந்தை ஆ) வஞ்சி இ) உழிஞை ஈ) நொச்சி
விடை: ஈ) நொச்சி
35. நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் _ திணை
அ) வஞ்சி ஆ) காஞ்சி
இ) நொச்சி ஈ) உழிஞை
விடை: ஆ) காஞ்சி
36. மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற வீரர்களுடன் கோட்டையை சுற்றி வளைத்தல் _ திணை
அ) வஞ்சி ஆ) காஞ்சி
இ) நொச்சி ஈ) உழிஞை
விடை: ஈ) உழிஞை
37. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது _ திணை
அ) பொதுவியல் ஆ) கைக்கிளை
இ) பெருந்திணை ஈ) வாகை
விடை: அ) பொதுவியல்
38. போரிலே வெற்றிபெற்ற மன்னன் சு+டுவது __
அ) நொச்சி ஆ) உழிஞை இ) தும்பை ஈ) வாகை
விடை: ஈ) வாகை
39. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது _ திணை
அ) பொதுவியல் ஆ) பாடாண்
இ) கைக்கிளை ஈ) வாகை
விடை: ஆ) பாடாண்
40. __ என்பது ஒருதலைக் காமம்
அ) பொதுவியல் ஆ) பாடாண்
இ) கைக்கிளை ஈ) வாகை
விடை: இ) கைக்கிளை
41. __ என்பது பெருந்தாக் காமம்
அ) பொதுவியல் ஆ) பாடாண்
இ) பெருந்திணை ஈ) தும்பை
விடை: இ) பெருந்திணை
42. வேளிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடி __
அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
விடை: ஆ) உழிஞை
43. இட்லிப்பு+ என்று அழைக்கப்படும் பு+ __
அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
விடை: ஈ) வெட்சி
44. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்து கொத்தாக மலரும் பு+:
அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
விடை: இ) வாகை
45. முடக்கொற்றான் என அழைக்கப்படுவது __
அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
விடை: ஆ) உழிஞை
46. பொருந்தாத இணையைக் கண்டறி
திணை – தொழில்
அ) முல்லை – வரகு விதைத்தல், களைபறித்தல் ஆ) பாலை – திரை கவர்தல் , சு+ரையாடல்
இ) குறிஞ்சி – தேனேடுத்தல் , கிழங்குஅகழ்தல் ஈ) மருதம் – மீன்பிடித்தல் , உப்பு விற்றல்
விடை: ஈ) மருதம் – மீன்பிடித்தல் , உப்பு விற்றல்
47. பாடலில் வரும் திணையைத் கண்டுபிடி
” வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வயவேந்தே! “
அ) பாடாண் திணை ஆ) பொதுவியல்
இ) வாகைத்திணை ஈ) தும்பைத்திணை
விடை: ஆ) பொதுவியல்
48. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு
திணை – சிறுபொழுது
அ) குறிஞ்சி – எற்பாடு
ஆ) முல்லை – நண்பகல்
இ) மருதம் – வைகறை
ஈ) நெய்தல் – மாலை
விடை: இ) மருதம் – வைகறை
49. பொருத்துக
1) குறிஞ்சி – துடி
2) முல்லை – தொண்டகம்
3) மருதம் – ஏறுகோட்டறை
4) பாலை – மணமுழா
அ) 4312 ஆ) 3421 இ) 2431 ஈ) 2341
விடை: ஈ) 2341
50. பொருத்துக
பொரும்பொழுது – மாதம்
1) கார்காலம் – மார்கழி, தை
2) முன்பனிக் காலம் – ஆவணி, புரட்டாசி
3) முதுவேனிற்காலம் – ஐப்பசி, கார்த்திகை
4) குளிர்காலம் – ஆனி, ஆடி
அ) 4312 ஆ) 2143 இ) 3214 ஈ) 2431
விடை: ஆ) 2143
51. கார் காலத்திற்குரிய மாதங்கள்
அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) ஆனி, ஆடி
இ) ஆவணி, புரட்டாசி ஈ) மார்கழி, தை
விடை: இ) ஆவணி, புரட்டாசி
52. ‘எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி’ – இதில் நொச்சி என்பது
அ) மதில் காத்தல் ஆ) மதில் வளைத்தல்
இ) மதில் பு+ச்சு+டல் ஈ) மதில் வாகைசு+டல்
விடை: அ) மதில் காத்தல்
53. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாச் சொல்லைக் கண்டறி
அ) வெட்சித்திணை ஆ) வாகைத்திணை
இ) முல்லைத்திணை ஈ) வஞ்சித்திணை
விடை: இ) முல்லைத்திணை
54. ‘ எற்பாடு ‘ என்பதன் பொருள்
அ) சு+ரியன் உதிக்கும் நேரம் ஆ) ஏற்றப்பாட்டுப் பாடுதல்
இ) சந்திரன் தோன்றும் நேரம் ஈ) சு+ரியன் மறையும் நேரம்
விடை: ஈ) சு+ரியன் மறையும் நேரம்
55. ‘ ழூதூர் ‘ எத்திணைக்குரிய ஊர்?
அ) மருதம் ஆ) பாலை இ) குறிஞ்சி ஈ) நெய்தல்
விடை: அ) மருதம்
56. சரியானவற்றைத் தேர்வு செய்க
பொருள் – திணை
1) எதிரூன்றல் – வெட்சி
2) மீட்டல் – வஞ்சி
3) செரூவென்றது – வாகை
4) எயில் காத்தல் – நொச்சி
அ) 1ம் 2ம் சரி ஆ) 2ம் 3ம் சரி
இ) 3ம் 4ம் சரி ஈ) 1ம் 4ம் சரி
விடை: இ) 3ம் 4ம் சரி
57. பொருத்துக
1) குறிஞ்சி – நெல்லரிதல்
2) முல்லை – கிழங்ககழ்தல்
3) மருதம் – உப்பு விற்றல்
4) நெய்தல் – வரகு விதைத்தல்
அ) 2413 ஆ) 1324 இ) 3241 ஈ) 4321
விடை: அ) 2413
58. ‘ ஆ ‘ – முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
அ) குரங்கு ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) மருதம்
விடை: அ) குரங்கு
59. திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக
1) குறிஞ்சி – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
2) முல்லை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
3) மருதம் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
4) நெய்தல் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
அ) 1324 ஆ) 3142 இ) 4213 ஈ) 2431
விடை: ஆ) 3142
60. பொருந்தா இணையைச் சுட்டுக
1) குறிஞ்சி – யாமம்;
2) முல்லை – மாலை
3) மருதம் – நண்பகல்
4) நெய்தல் – எற்பாடு
விடை: 3. மருதம் – நண்பகல்
விடைகள்:
- விடை: அ) அகத்திணை
- விடை: ஆ) 21354
- விடை: அ) முதற்பொருள்
- விடை: ஆ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: ஆ) 231
- விடை: ஆ) 132
- விடை: இ) ஆவணி, புரட்டாசி
- விடை: ஈ) ஆனி, ஆடி
- விடை: ஆ) மாசி, பங்குனி
- விடை: அ) 123
- விடை: இ) வைகறை
- விடை: இவை ழூன்றும்
- விடை: ஆ) 3124
- விடை: அ) ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவை கருப்பொருள்கள்
- விடை: இ) தொண்டகம்
- விடை: ஈ) பஞ்சுரப்பண்
- விடை: இ) 1342
- விடை: ஈ) இலுப்பை, பாலை
- விடை: ஈ) குறும்பு
- விடை: இ) புன்னை, ஞாழல்
- விடை: ஆ) 2341
- விடை: ஈ) எயினர்
- விடை: இ) செந்நெல், வெண்ணெய்
- விடை: ஆ) பாடி, சேரி
- விடை: ஆ) 1243
- விடை: ஆ) 2134
- விடை: ஈ) விளரி யாழ்
- விடை: இ) துடி
- விடை: அ) 5
- விடை: இ) 12
- விடை: அ) வெட்சித் திணை
- விடை: ஆ) வஞ்சி
- விடை: ஈ) நொச்சி
- விடை: ஆ) காஞ்சி
- விடை: ஈ) உழிஞை
- விடை: அ) பொதுவியல்
- விடை: ஈ) வாகை
- விடை: ஆ) பாடாண்
- விடை: இ) கைக்கிளை
- விடை: இ) பெருந்திணை
- விடை: ஆ) உழிஞை
- விடை: ஈ) வெட்சி
- விடை: இ) வாகை
- விடை: ஆ) உழிஞை
- விடை: ஈ) மருதம் – மீன்பிடித்தல் , உப்பு விற்றல்
- விடை: ஆ) பொதுவியல்
- விடை: இ) மருதம் – வைகறை
- விடை: ஈ) 2341
- விடை: ஆ) 2143
- விடை: இ) ஆவணி, புரட்டாசி
- விடை: அ) மதில் காத்தல்
- விடை: இ) முல்லைத்திணை
- விடை: ஈ) சு+ரியன் மறையும் நேரம்
- விடை: அ) மருதம்
- விடை: இ) 3ம் 4ம் சரி
- விடை: அ) 2413
- விடை: அ) குரங்கு
- விடை: ஆ) 3142
- விடை: 3. மருதம் – நண்பகல்
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் PDF பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!