திருவள்ளூர்:முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, 2022- – 23-ம் கல்வி ஆண்டிலிருந்து, 1 – 5ம் வகுப்பு வரை 2,000; 6 – 8-ம் வகுப்பு வரை 4,000; 9 – 10-ம் வகுப்பு வரை, 5,000 மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.மேலும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய சட்ட பள்ளிகளில் படிப்போருக்கு, 50 ஆயிரம் ரூபாய்; சைனிக் பள்ளியில் பயின்று வரும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வூக்கத்தொகை பெறும் சிறார்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு திருவள்ளூரில் இயங்கும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 044 -29595311 வாயிலாகவோ தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அளித்து பயனடையுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டு உள்ளார்.