
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு படித்த வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.
வேலை நாடுநா்கள், வேலையளிக்கும் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வர வேண்டும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு பாதிக்காது என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டது.