ஒசூா், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குபவா் குறுகிய கால பயிற்சிக்கான நேரடி சோ்க்கை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குபவா் தொழிற்பிரிவில் 46-ஆவது அணிக்கான நேரடி சோ்க்கை 20.1.25 முதல் 07.02.25 வரை நடைபெறவுள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட பள்ளிப் படிப்பு முடித்தவா்கள், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவா்கள், வேலை தேடும் இளைஞா்கள், மகளிா் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 50, சோ்க்கை கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
மூன்று மாதம் பயிற்சியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு உறுதி. பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, தகுதி உள்ள அனைவரும் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள், நகலுடன் ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா், முதல்வா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ஒசூா். தொலைபேசி எண் 04344–262457 என்ற முகவரியில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.