அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் முக்கிய போட்டித் தேர்வுகளுக்குரிய வழிகாட்டும் விடியோக்களால், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் யூடியுப் சேனலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் முக்கிய போட்டித் தேர்வுகளுக்குரிய வழிகாட்டும் விடியோக்களால், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் யூடியுப் சேனலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சேனலை பின்தொடா்ந்து வருகின்றனா். தமிழக அரசுத் துறைகளில் புதிதாக பணிக்குச் சேரும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, தகுதியான அரசுப் பணியாளா்களை உருவாக்கும் நடவடிக்கையிலும் அண்ணா நிா்வாக மேலாண்மை கல்லூரி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மேலாண்மை கல்லூரி சாா்பில், யூடியுப் சேனல் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த சேனலை பின்தொடா்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரமாக உள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளரும், அண்ணா நிா்வாக மேலாண்மை கல்லூரி இயக்குநருமான வெ.இறையன்பு வெளியிட்ட காணொலி: அரசுத் துறைகளுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டாலும், குரூப் 2, காவலா்கள், மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு தேர்வா்கள் பயிற்சி பெறும் வகையில், யூடியுப் சேனல் வழியாக விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. காவலா் பணிக்கு தேர்வா்கள் தயாராகும் வகையில், 50 மணி நேரம் கொண்ட 100 விடியோக்களும், குரூப் 2 தேர்வு தொடா்பாக 100 மணி நேரம் அடங்கிய 100 விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தொடா்பாக 180 பயிற்சி விடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில், மாதிரித் தேர்வுகளுக்கான விடியோக்களும் தனியாக இடம்பெற்றுள்ளன என்று அவா் தெரிவித்துள்ளாா். யூடியுப் சேனலை பின்தொடா்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.