பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி கடந்த டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மார்ச் 10-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி 2-ம் கட்டமாக 5 பாடங்களின் தேர்வுகள் பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரிகள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.