சென்னை குடிநீர் வடிகால் வாரியம்
சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் (CMWSSB), பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ / பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம்
பயிற்சி பணி விவரங்கள்
1) பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Engineering)
Civil Engineering / Mechanical Engineering – 52
Electrical and Electronics Engineering – 24
மொத்த காலியிடங்கள்: 76
உதவித்தொகை : 9000
கல்வித் தகுதி: 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் (B.E./B.Tech) இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
பாடப்பிரிவுகள், பயிற்சி பணியிட விவரங்கள்
2) பயிற்சியின் பெயர்: Diploma Apprentices (Technician Apprentices)
Civil Engineering – 10
Electrical and Electronics Engineering – 22
மொத்த காலியிடங்கள்: 32
உதவித்தொகை : ரூ.8,000
கல்வித் தகுதி: 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து, பின்னர் CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD என்ற இணைப்பில் சென்று விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை முன்பதிவு செய்யுங்கள்.
அடுத்து, இந்த இணையதளத்தில் வழங்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி Top Down Button- கிளிக் செய்யுங்கள்.
அதிலிருந்து Chennai Metropolitan Water Supply and Sewerage Board- என்ற இணைப்பில் சென்று விண்ணப்பம் செய்யுங்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
டிப்ளமோ படிப்பு அல்லது B.E./ B.Tech. படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விபரம் 28-10-2024 அன்று BOAT இணையதளத்தில் வெளியாகும்.
நேர்முகத்தேர்வு 07-11-2024 மற்றும் 08-11-2024 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும்.
நேர்முகத் தேர்வுக்கு அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 21.10.2024
மேலும் கூடுதல் விவரங்களுக்கு CMWSSB Notification for engagement of Apprentices for the year 2024 -25 இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கையை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
குறிப்பு:
2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.