அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்., 14ல் துவங்குகிறது.
மாதிரித் தேர்வுகள், குழு விவாதங்களும் நடத்தப்படும். எனவே தேர்வுகளுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, அல்லது 63792 – 68661 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.