பி.இ, பி.டெக் அல்லது டிப்ளமோ படிச்சிருக்கீங்களா? மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான `இந்துஸ்தான் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் பயிற்சி (Trainee) பணிகளுக்கு 212 பேர் தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
Hindustan Fertilizers and Chemicals Limited பயிற்சிபணி விவரங்கள்:
கெமிக்கல், கருவியகம் (Instrumentation), எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறைகளில் பட்டதாரி இன்ஜினியர் டிரெயினி மற்றும் டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி.
மொத்த காலி பணியிடங்கள்: 212
உதவித்தொகை: ரூ.40,000 (பட்டதாரி இன்ஜினியர் டிரெயினி), ரூ.23,000 (டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி).
வயது வரம்பு: 18 – 30 (டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி), 18 – 27 (டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி).
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக், டிப்ளமோ.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024
இணையதள முகவரி: https://career.hurl.net.in/
என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகிய தேர்வுகள் நடைபெறும்.