டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் – 2, 2ஏ’தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகிருஷ்ணகிரி, அக். 2-கிருஷ்ணகிரியில் டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் – 2, 2ஏ’ முதன்மை தேர்விற்கு வரும், 4ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட, ‘குரூப் – 2, 2ஏ’ ஆகியவற்றில், 2,327 காலிபணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 14ல் நடந்தது.
இதை தொடர்ந்து தற்போது டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் – 2, 2ஏ’ முதன்மை தேர்விற்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 4 காலை, 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
இதுதொடர்பான விபரங்களுக்கு, 04343 291983 என்கிற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தை சார்ந்த தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள், இவ்வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.