கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைப்பணியின்போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடன் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியம், 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கவும், இவா்களுக்கு திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளை அரசால் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, சுயதொழில் தொடங்க விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைப்பணியின்போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் விழுப்புரத்திலுள்ள முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.