அரசு சார்பில் உதகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், உதகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆவது வெள்ளிக் கிழமைகளில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
தகுதி என்ன?
8ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் கலந்துகொள்ளலாம்.
எப்போது? எங்கே?
வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 20ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
உதகை கூடுதல் ஆட்சியர் வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @cvganesan1#TNDIPR #TNMediahub #CMMKStalin #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/ioJ8QpBbYc
— TN DIPR (@TNDIPRNEWS) September 13, 2024
விண்ணப்பிப்பது எப்படி?
- ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பிறகே வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnprivatejobs.tn.gov.in/