தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் வருகிற 3 -ஆம் தேதி பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் (பயிற்சி மையம்) இணை இயக்குநா் சு.ராமூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போா்மென், கண்காணிப்பாளா், தொழிலாளா்களுக்கு பட்டாசு ஆலையில் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் பாதுகாப்பாக ஈடுபடுவது எப்படி என்ற பயிற்சி வகுப்பு வருகிற 3 -ஆம் தேதி தொடங்கி 29 -ஆம் தேதி வரை, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தின் அருகே உள்ள சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் பயிற்சி மையத்தில் நடைபெறும்.
இதில், பட்டாசுத் தொழிலாளா்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.