சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் பயிற்சி நடத்தப்படுகிறது.
வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ள பொருட்களை கண்டறிவது, ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள், ஏற்று மதியாளர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள், ஏற்றுமதி வர்த் தகத்தை எவ்வாறு தொடங்குவது, எவ்வாறு பதிவு செய்வது உள்ளிட் டவை குறித்து கற்றுத் தரப்படும்.
ஏற்றுமதி தொழில் செய்ய விரும்பும் தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி மார்க் கெட்டிங் மேலாளர்கள், எம்பிஏ, எம்.காம், பி.காம் மாணவர்கள் உள் ளிட்டோருக்கு இப்பயிற்சி பய னுள்ளதாக இருக்கும்.
25 இடங்கள் மட்டுமே உள்ளதால், முதலில் வரு பவர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.4,200. பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்து கூடுதல் விவரங் களுக்கு 91504 95272, 94442 45180 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.