புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜவகர்
நவோதயா வித்யாயலா பள்ளி
களில் 9ம் வகுப்பில்
சேர, அக்.30க்குள்
ஆன்–லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்.காலாப்பட்டில் உள்ள ஜவகர் நவோதயா
வித்யா லயா பள்ளி
முதல்வர் பொன் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரியில் காலாப்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மத்திய
அரசு கல்வித் துறையின்
கீழ் ஜவகர் நவோதயா
வித்யாலயா பள்ளிகள் இயங்கி
வருகின்றன. இப்பள்ளிகளில், வரும்
2022-23ம் கல்வியாண்டில், ஒன்பதாம்
வகுப்பில் காலி இடங்களை
நிரப்பு வதற்கு, நவோதயா
வித்யாலயா சமிதி இணையதளம்
மூலம் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன்
மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு செப்.13 முதல் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.navodaya.gov.in (or) www.nvsadmissionclassnine.in என்ற
இணைய தளத்தில் இலவசமாக
சமர்ப்பிக்கலாம்.
இலவச
உண்டு, உறைவிட கல்வியினை
தரும் இப்பள்ளியில் மாணவ
– மாணவிகளுக்கு தனித்தனி
விடுதி வசதிகள் உள்ளன.சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில் இயங்கும்
இப்பள்ளியில் சேர,
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும்
அரசு அங்கீகாரம் பெற்ற
பள்ளிகளில் 2021-22ம் ஆண்டு
8ம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்க வேண்டும்.
மாணவர்கள்
01.05.2006 மற்றும் 30.04.2010 (இரு
நாட்களும் உள்பட) இடை
யில் பிறந்தவராக இருத்தல்
வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள், அக்.30
ஆகும். மேலும் விபரங்களுக்கு புதுச்சேரி ஜவகர் நவோதயா
பள்ளி முதல்வர் அலுவலகத்தை 0413-2655133 என்ற தொலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.