தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (1.0 இன்பத்தமிழ்) ஒரு வரி வினா விடைகள்
நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (இன்பத்தமிழ்) ஒரு வரி வினா விடைகள்
1. “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் ” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
2.பாரதிதாசன் இயற்பெயர் என்ன?
சுப்புரத்தினம்
3. சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை என்று மாற்றிக் கொண்டார்?
பாரதிதாசன்
4. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கபடுகிறார்?
புரட்சிகவி, பாவேந்தர்
5. பாரதிதாசன் தன்னுடைய தம் கவிதைகளில் எந்த கருத்துகளை உள்வாங்கி பாடுகிறார்?
- பெண்கல்வி
- கைம்பெண்
- மறுமணம்
- பொதுவுடைமை
- பகுத்தறிவு
6. பாரதிதாசன் பெற்றோர் யார்?
தந்தை: கனகசபை, தாய்: இலக்குமி
7. பாரதிதாசன் பிறந்த ஆண்டு?
1891 ஏப்ரல் 29-புதுவை
8.பாரதிதாசன் படைப்புகள்?
குடும்பவிளக்கு
இருண்டவீடு
தமிழியக்கம்
பாண்டியன் பரிசு
அழகின் சிரிப்பு
9. தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும் அமிழ்தேநீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழின் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” என தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
கவிஞர் காசி ஆனந்தன்
10. அமுதம் மிகவும் இனிமையானது .அது போலவே தமிழும் இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் __க்கு ஆணையானது?
உயிர்க்கு
11. தமிழுக்கு நிலவென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான__போன்றது?
நீர்
12. தமிழுக்கு மணம் என்று பெயர் அது எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட __ ஆகும்
ஊர்
13. தமிழ் எங்கள் இளமைக்கு காரணமான பால் போன்றது.நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான __ போன்ற கருவி?
வேல்
14. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பதமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் __ போன்றது?
தேன்
15. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க __ ஆகும்?
வாள்
16. ஏற்றத்தாழ்வற்ற __ அமைய வேண்டும்?
சமூகம்
17. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு __ ஆக இருக்கும்?
அசதி
18. நிலவு . என்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
நிலவென்று
19. தமிழ் . எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
தமிழெங்கள்
20.அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அமுது+என்று
21. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
செம்மை+பயிர்
22. நிருமித்த என்னும் சொல்லின் பொருள்?
உருவாக்கிய
23. சமூகம் என்னும் சொல்லின் பொருள்?
மக்கள் குழு
24. விளைவு என்னும் சொல்லின் பொருள்?
வளர்ச்சி
25. அசதி என்னும் சொல்லின் பொருள்?
சோர்வு
26. பொருத்துக
1) விளைவுக்கு – நீர்
2) இளமைக்கு – பால்
3) அறிவுக்கு -தோல்
4) புலவர்க்கு – வேல்
27. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
அமுதம், நிலவு, மனம்
28. பொருள் தருக:
- வான் – வானம்
- இணை – சமம்
- சுடர் – ஒளி
29. எதிர்சொல் தருக:
இளமை x முதுமை
புகழ் x இகழ்
அசதி x சுறுசுறுப்பு
ஒளி x இருள்
இன்பம் x துன்பம்
அமுதம் x விடம்
30 .பாரதிதாசன் காலம் என்ன?
29-04-1891 முதல் 21-04-1964 வரை
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow