தமிழக அரசு
வேலைக்காக 63 லட்சம் பேர்
பதிவு செய்துள்ளனர் – வேலைவாய்ப்பு துறை
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முதல்
பட்டப்படிப்பு வரை
பயின்ற மாணவர்கள் அவர்களின்
மாவட்டங்களில் உள்ள
வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் B.E, B.Tech, பிஎஸ்சி
விவசாயம், MBBS, M.Phil உள்ளிட்ட தொழிற்படிப்பு தகுதிகள்,
முதுகலை பட்டப் படிப்புத்
தகுதிகளையும் சென்னை
மற்றும் மதுரையில் உள்ள
மாநில தொழில் மற்றும்
செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை சார்பில்
பிப்ரவரி 28 ஆம் தேதி
பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் மொத்த
எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து
122 உள்ளது. அதில் 22 லட்சத்து
78 ஆயிரத்து 107 பேர், 24 வயது
முதல் 35 வரை உள்ளவர்கள். மேலும் 10 லட்சத்து 89 ஆயிரத்து
786 பேர், 36 முதல் 57 வயது
வரை உள்ளவர்கள்.
ஒரு
லட்சத்து 65 ஆயிரத்து 983 இடைநிலை
ஆசிரியர்களும், பிஎட்
முடித்த 2 லட்சத்து 97 ஆயிரத்து
362 பட்டதாரிகளும், பிஎட்
முடித்த2 லட்சத்து 18 ஆயிரத்து
324 முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர்.
மேலும், 2 லட்சத்து 8 ஆயிரத்து
556 பிஇ, பிடெக் பட்டதாரிகளும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 411 எம்இ,
எம்டெக் பட்டதாரிகளும் அரசு
வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.