தமிழகத்தில் 605 மருத்துவர் காலிப்பணியிடங்கள் – நாளை
முதல் கலந்தாய்வு
தமிழகத்தில் கிராம புறங்களில் மருத்துவ
சேவை புரிந்தவர்களுக்கு மருத்துவ
மற்றும் ஊரக சுகாதார
சேவைகள் இயக்குனரகத்தில் 605 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு
வெளிப்படையாக நடத்தப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
காலிப்பணியிடங்களில் மருத்துவர்கள் தங்களுக்கான பணியிடங்களை தாங்களே
தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்கான
கலந்தாய்வு நாளை முதல்
27ஆம் தேதி வரை
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சேவை
புரிந்து பின்னர் முதுகலை
மருத்துவம் பயின்றவர்கள் இந்த
கலந்தாய்வில் பங்கேற்று
தங்களுக்கான பணியிடங்களை தேர்வு
செய்ய உள்ளனர். இந்த
கலந்தாய்வு கடந்த 10 ஆண்டுகளாக
வெளிப்படை தன்மை இல்லாமல்
நடைபெற்றது.
தற்போது
முதல் முறையாக எந்தெந்த
துறையில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்று அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இந்த
அறிவிப்பு காரணமாக பல
ஆண்டு கோரிக்கை தற்போது
நிறைவேறி உள்ளதாக அரசு
மருத்துவர்கள் கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த
கலந்தாய்வு துறை ரீதியாகவும், அனுபவத்தின் அடிப்படையிலும் நடத்தப்பட
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.