Saturday, April 19, 2025
HomeBlog50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
- Advertisment -

50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் பிற அரசு தேர்வுகளுக்கான 50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் தேடுகிறீர்களா? இங்கு நீங்கள் தேடியுள்ள பொருள் இலக்கணம் சார்ந்த முக்கிய வினா-விடைகள் தொகுப்பை பெறலாம்!

இதில், 50+ பொருள் இலக்கணம் பற்றிய முக்கிய வினா-விடைகள் உள்ளன. TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான உதவியாக இந்த தொகுப்பு மிக முக்கியமானது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள்:

  • 📝 50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள்
  • 📚 எளிமையான விளக்கங்களுடன்
  • 🎯 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உகந்த பயிற்சிகள்
  • 🏆 தேர்வு வெற்றி பெற உதவிய பயிற்சிகள்
  1. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது?
    அ) அகத்திணை ஆ) புறத்திணை
    இ) அ மற்றும் ஆ ஈ) கைக்கிளை
  2. பொருத்துக
    1) குறிஞ்சி – காடும் காடுசார்ந்த இடமும்
    2) முல்லை – மலையம் மலைசார்ந்த இடமும்
    3) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
    4) நெய்தல் – சுரமும் சுரம் சார்ந்த இடமும்
    5) பாலை – கடலும் கடல் சார்ந்த இடமும்
    அ) 12345 ஆ) 21354 இ) 51234 ஈ) 41352
  3. நிலமும் பொழுதும் _ எனப்படும்
    அ) முதற்பொருள் ஆ) கருப்பொருள்
    இ) உரிப்பொருள் ஈ) இவை ழூன்றும்
  4. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _
    அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
    ஆ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
    இ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
    ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
  5. கூற்றினை ஆராய்க
    1) ஓராண்டின் ஆறு கூறுகள் – பெரும்பொழுது
    2) ஒரு வாரத்தின் ஆறு கூறுகள் – சிறுபொழுது
    அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
    இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
  6. பொருத்துக
    1) காலை 6 மணி முதல் 10 வரை – நண்பகல்
    2) மாலை 6 மணி முதல் இரவு 10 வரை – காலை
    3) காலை 10 மணி முதல் 2 வரை – மாலை
    அ) 123 ஆ) 231 இ) 312 ஈ) 213
  7. பொருத்துக
    1) வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
    2) எற்பாடு – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
    3) யாமம் – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
    அ) 123 ஆ) 132 இ) 231 ஈ) 312
  8. கார்காலம்:-
    அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) மாசி, பங்குனி
    இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஆனி, ஆடி
  9. முதுவேனிற்காலம்:-
    அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) மாசி, பங்குனி
    இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஆனி, ஆடி
  10. பின்பனிக்காலம்:-
    அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) மாசி, பங்குனி
    இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஆனி, ஆடி
  11. பொருத்துக:-
    1) குளிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை
    2) முன்பனிக்காலம் – மார்கழி, தை
    3) இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி
    அ) 123 ஆ) 132 இ) 213 ஈ) 312
  12. மருதம் நிலத்திற்குரிய சிறுபொழுது?
    அ) யாமம் ஆ) மாலை இ) வைகறை ஈ) எற்பாடு
  13. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
    அ) இளவேனில் ஆ) முதுவேனில்
    இ) பின்பனி ஈ) இவை ழூன்றும்
  14. நிலத்திற்குரிய சிறுபொழுதினை பொருத்துக
    1) குறிஞ்சி – மாலை
    2) முல்லை – எற்பாடு
    3) நெய்தல் – யாமம்
    4) பாலை – நண்பகல்
    அ) 1234 ஆ) 3124 இ) 4123 ஈ) 3214
  15. பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு:
    அ) ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவை கருப்பொருள்கள்
    ஆ) ‘எல்’ என்றால் ஞாயிறு, ‘பாடு’ என்றால் சுரியன் உதிக்கும் நேரம்
    இ) நிலமும் பொழுதும் உரிப்பொருள்
    ஈ) பொழுது 3 வகைப்படும்
  16. குறிஞ்சி நிலத்திற்குரிய பறை:
    அ) ஏறு கோட்பறை ஆ) மணமுழா
    இ) தொண்டகம் ஈ) துடி
  17. பாலை நிலத்திற்குரிய பண் _
    அ) குறிஞ்சிப்பண் ஆ) முல்லைப்பண்
    இ) செவ்வழிப்பண் ஈ) பஞ்சுரப்பண்
  18. பொருத்துக
    1) குறிஞ்சி – அருவிநீர், சுனைநீர்
    2) முல்லை – வற்றிய நீர்
    3) நெய்தல் – காட்டாறு
    4) பாலை – மணற்கிணறு
    அ) 2314 ஆ) 1423 இ) 1342 ஈ) 3142
  19. பாலை நிலத்திற்குரிய மரம் _
    அ) கொன்றை, காயா ஆ) காஞ்சி, மருதம்
    இ) புன்னை, ஞாழல் ஈ) இலுப்பை, பாலை
  20. பாலை நிலத்திற்குரிய ஊர் _
    அ) சிறுக்குடி ஆ) பாடி, சேரி
    இ) பட்டினம், பாக்கம் ஈ) குறும்பு
  21. நெய்தல் நிலத்திற்குரிய மரம் _
    அ) அகில், வேங்கை ஆ) கொன்றை, காயா
    இ) புன்னை, ஞாழல் ஈ) இலுப்பை, பாலை
  22. பொருத்துக
    1) குறிஞ்சி – வருணன்
    2) முல்லை – முருகன்
    3) மருதம் – திருமால்
    4) நெய்தல் – இந்திரன்
    அ) 2314 ஆ) 2341 இ) 1234 ஈ) 1432
  23. பாலை நிலத்திற்குரிய மக்கள்
    அ) வெற்பன் ஆ) தோன்றல்
    இ) ஊரன் ஈ) எயினர்
  24. மருதம் நிலத்திற்குரிய உணவு _
    அ) மலைநெல், தினை ஆ) வரகு, சாமை
    இ) செந்நெல், வெண்ணெய் ஈ) மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
  25. முல்லை நிலத்திற்குகுரிய ஊர் _
    அ) சிறுகுடி ஆ) பாடி, சேரி
    இ) பேருர், மூதூர் ஈ) பட்டினம்
  26. பொருத்துக
    1) குறிஞ்சி – சிறுகுடி
    2) முல்லை – பாடி,சேரி
    3) மருதம் – பட்டினம்
    4) நெய்தல் – பேருர்,மூதூர்
    அ) 1234 ஆ) 1243 இ) 4123 ஈ) 3142
  27. பொருத்துக
    1) குறிஞ்சி – ஏறு தழுவுதல்
    2) முல்லை – தேனெடுத்தல்
    3) மருதம் – நெல்லரித்தல்
    4) நெய்தல் – மீன்பிடித்தல்
    அ) 4123 ஆ) 2134 இ) 3142 ஈ) 2143
  28. நெய்தல் நிலத்திற்குரிய யாழ் _
    அ) குறிஞ்சி யாழ் ஆ) முல்லை யாழ்
    இ) மருத யாழ் ஈ) விளரி யாழ்
  29. பாலை நிலத்திற்குரிய பறை _
    அ) தொண்டகம் ஆ) ஏறுகோட்டறை
    இ) துடி ஈ) மணமுழா
  30. அகத்திணையின் வகைகள் _
    அ) 5 ஆ) 9 இ) 12 ஈ) 15
  31. புறத்திணையின் வகைகள் _
    அ) 5 ஆ) 9 இ) 12 ஈ) 15
  32. ஆநிரை கவர்தல் _ திணை
    அ) வெட்சித் திணை ஆ) கரந்தைத் திணை
    இ) உழிஞைத் திணை ஈ) தும்பைத் திணை
  33. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி போருக்குச் செல்வது _ திணை
    அ) கரந்தை ஆ) வஞ்சி இ) உழிஞை ஈ) நொச்சி
  34. முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பு+வைச் சு+டி உள்ளிருந்தே போரிடுவது _ திணை
    அ) கரந்தை ஆ) வஞ்சி இ) உழிஞை ஈ) நொச்சி
  35. நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் _ திணை
    அ) வஞ்சி ஆ) காஞ்சி
    இ) நொச்சி ஈ) உழிஞை
  36. மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற வீரர்களுடன் கோட்டையை சுற்றி வளைத்தல் _ திணை
    அ) வஞ்சி ஆ) காஞ்சி
    இ) நொச்சி ஈ) உழிஞை
  37. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது _ திணை
    அ) பொதுவியல் ஆ) கைக்கிளை
    இ) பெருந்திணை ஈ) வாகை
  38. போரிலே வெற்றிபெற்ற மன்னன் சு+டுவது __
    அ) நொச்சி ஆ) உழிஞை இ) தும்பை ஈ) வாகை
  39. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது _ திணை
    அ) பொதுவியல் ஆ) பாடாண்
    இ) கைக்கிளை ஈ) வாகை
  40. __ என்பது ஒருதலைக் காமம்
    அ) பொதுவியல் ஆ) பாடாண்
    இ) கைக்கிளை ஈ) வாகை
  41. __ என்பது பெருந்தாக் காமம்
    அ) பொதுவியல் ஆ) பாடாண்
    இ) பெருந்திணை ஈ) தும்பை
  42. வேளிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடி __
    அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
  43. இட்லிப்பு+ என்று அழைக்கப்படும் பு+ __
    அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
  44. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்து கொத்தாக மலரும் பு+:
    அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
  45. முடக்கொற்றான் என அழைக்கப்படுவது __
    அ) நொச்சி ஆ) உழிஞை இ) வாகை ஈ) வெட்சி
  46. பொருந்தாத இணையைக் கண்டறி
    திணை – தொழில்
    அ) முல்லை – வரகு விதைத்தல், களைபறித்தல் ஆ) பாலை – திரை கவர்தல் , சு+ரையாடல்
    இ) குறிஞ்சி – தேனேடுத்தல் , கிழங்குஅகழ்தல் ஈ) மருதம் – மீன்பிடித்தல் , உப்பு விற்றல்
  47. பாடலில் வரும் திணையைத் கண்டுபிடி
    ” வான் உட்கும் வடிநீண் மதில்,
    மல்லல் மூதூர் வயவேந்தே! “
    அ) பாடாண் திணை ஆ) பொதுவியல்
    இ) வாகைத்திணை ஈ) தும்பைத்திணை
  48. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு
    திணை – சிறுபொழுது
    அ) குறிஞ்சி – எற்பாடு
    ஆ) முல்லை – நண்பகல்
    இ) மருதம் – வைகறை
    ஈ) நெய்தல் – மாலை
  49. பொருத்துக
    1) குறிஞ்சி – துடி
    2) முல்லை – தொண்டகம்
    3) மருதம் – ஏறுகோட்டறை
    4) பாலை – மணமுழா
    அ) 4312 ஆ) 3421 இ) 2431 ஈ) 2341
  50. பொருத்துக
    பொரும்பொழுது – மாதம்
    1) கார்காலம் – மார்கழி, தை
    2) முன்பனிக் காலம் – ஆவணி, புரட்டாசி
    3) முதுவேனிற்காலம் – ஐப்பசி, கார்த்திகை
    4) குளிர்காலம் – ஆனி, ஆடி
    அ) 4312 ஆ) 2143 இ) 3214 ஈ) 2431
  51. கார் காலத்திற்குரிய மாதங்கள்
    அ) ஐப்பசி, கார்த்திகை ஆ) ஆனி, ஆடி
    இ) ஆவணி, புரட்டாசி ஈ) மார்கழி, தை
  52. ‘எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி’ – இதில் நொச்சி என்பது
    அ) மதில் காத்தல் ஆ) மதில் வளைத்தல்
    இ) மதில் பு+ச்சு+டல் ஈ) மதில் வாகைசு+டல்
  53. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாச் சொல்லைக் கண்டறி
    அ) வெட்சித்திணை ஆ) வாகைத்திணை
    இ) முல்லைத்திணை ஈ) வஞ்சித்திணை
  54. ‘ எற்பாடு ‘ என்பதன் பொருள்
    அ) சு+ரியன் உதிக்கும் நேரம் ஆ) ஏற்றப்பாட்டுப் பாடுதல்
    இ) சந்திரன் தோன்றும் நேரம் ஈ) சு+ரியன் மறையும் நேரம்
  55. ‘ ழூதூர் ‘ எத்திணைக்குரிய ஊர்?
    அ) மருதம் ஆ) பாலை இ) குறிஞ்சி ஈ) நெய்தல்
  56. சரியானவற்றைத் தேர்வு செய்க
    பொருள் – திணை
    1) எதிரூன்றல் – வெட்சி
    2) மீட்டல் – வஞ்சி
    3) செரூவென்றது – வாகை
    4) எயில் காத்தல் – நொச்சி
    அ) 1ம் 2ம் சரி ஆ) 2ம் 3ம் சரி
    இ) 3ம் 4ம் சரி ஈ) 1ம் 4ம் சரி
  57. பொருத்துக
    1) குறிஞ்சி – நெல்லரிதல்
    2) முல்லை – கிழங்ககழ்தல்
    3) மருதம் – உப்பு விற்றல்
    4) நெய்தல் – வரகு விதைத்தல்
    அ) 2413 ஆ) 1324 இ) 3241 ஈ) 4321
  58. ‘ ஆ ‘ – முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
    அ) குரங்கு ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) மருதம்
  59. திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக
    1) குறிஞ்சி – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
    2) முல்லை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
    3) மருதம் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
    4) நெய்தல் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
    அ) 1324 ஆ) 3142 இ) 4213 ஈ) 2431
  60. பொருந்தா இணையைச் சுட்டுக
    1) குறிஞ்சி – யாமம்;
    2) முல்லை – மாலை
    3) மருதம் – நண்பகல்
    4) நெய்தல் – எற்பாடு
  1. விடை: அ) அகத்திணை
  2. விடை: ஆ) 21354
  3. விடை: அ) முதற்பொருள்
  4. விடை: ஆ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  5. விடை: அ) 1 மட்டும் சரி
  6. விடை: ஆ) 231
  7. விடை: ஆ) 132
  8. விடை: இ) ஆவணி, புரட்டாசி
  9. விடை: ஈ) ஆனி, ஆடி
  10. விடை: ஆ) மாசி, பங்குனி
  11. விடை: அ) 123
  12. விடை: இ) வைகறை
  13. விடை: இவை ழூன்றும்
  14. விடை: ஆ) 3124
  15. விடை: அ) ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவை கருப்பொருள்கள்
  16. விடை: இ) தொண்டகம்
  17. விடை: ஈ) பஞ்சுரப்பண்
  18. விடை: இ) 1342
  19. விடை: ஈ) இலுப்பை, பாலை
  20. விடை: ஈ) குறும்பு
  21. விடை: இ) புன்னை, ஞாழல்
  22. விடை: ஆ) 2341
  23. விடை: ஈ) எயினர்
  24. விடை: இ) செந்நெல், வெண்ணெய்
  25. விடை: ஆ) பாடி, சேரி
  26. விடை: ஆ) 1243
  27. விடை: ஆ) 2134
  28. விடை: ஈ) விளரி யாழ்
  29. விடை: இ) துடி
  30. விடை: அ) 5
  31. விடை: இ) 12
  32. விடை: அ) வெட்சித் திணை
  33. விடை: ஆ) வஞ்சி
  34. விடை: ஈ) நொச்சி
  35. விடை: ஆ) காஞ்சி
  36. விடை: ஈ) உழிஞை
  37. விடை: அ) பொதுவியல்
  38. விடை: ஈ) வாகை
  39. விடை: ஆ) பாடாண்
  40. விடை: இ) கைக்கிளை
  41. விடை: இ) பெருந்திணை
  42. விடை: ஆ) உழிஞை
  43. விடை: ஈ) வெட்சி
  44. விடை: இ) வாகை
  45. விடை: ஆ) உழிஞை
  46. விடை: ஈ) மருதம் – மீன்பிடித்தல் , உப்பு விற்றல்
  47. விடை: ஆ) பொதுவியல்
  48. விடை: இ) மருதம் – வைகறை
  49. விடை: ஈ) 2341
  50. விடை: ஆ) 2143
  51. விடை: இ) ஆவணி, புரட்டாசி
  52. விடை: அ) மதில் காத்தல்
  53. விடை: இ) முல்லைத்திணை
  54. விடை: ஈ) சு+ரியன் மறையும் நேரம்
  55. விடை: அ) மருதம்
  56. விடை: இ) 3ம் 4ம் சரி
  57. விடை: அ) 2413
  58. விடை: அ) குரங்கு
  59. விடை: ஆ) 3142
  60. விடை: 3. மருதம் – நண்பகல்

🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 50+ பொருள் இலக்கணம் வினா – விடைகள் PDF பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

Online Printout
Online Printout
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -