கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. இந்தப் பூங்காவில் மான், குரங்கு, பறவைகள் என 100-க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.
இந்தப் பூங்காவுக்கு விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவை உலகத் தரம் வாய்ந்ததாக உயர்த்தவும் மாற்றியமைப்பதற்காகவும் 6 மாதங்கள் வரை பார்வையாளர்களுக்கு மூடப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.