2 மாதங்களுக்கு ரேஷன்
கார்டு வைத்திருக்கும் 80 கோடி
மக்களுக்கு தலா 5 கிலோ
அரிசி மற்றும் 1 கிலோ
பருப்பு இலவசம்
நடப்பு
ஆண்டில் கொரோனா தொற்றின்
இரண்டாம் அலை பாதிப்பு
கட்டுக்கடங்காமல் உள்ளதால்
பல மாநிலங்களிலும் ஊரடங்கு
மற்றும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால்
மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மத்திய
அரசு கரீப் கல்யாண்
அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மே மற்றும்
ஜூன் 2 மாதங்களுக்கு ரேஷன்
கார்டு வைத்திருக்கும் 80 கோடி
மக்களுக்கு தலா 5 கிலோ
அரிசி மற்றும் 1 கிலோ
பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால்
80 கோடி மக்கள் பயனடைவார்கள்.
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை
செய்வதன் மூலம் ரூ.1.75
லட்சம் கோடி நிதி
திரட்ட இருப்பதாக மத்திய
நிதியமைச்சர் அறிவித்தார். அதன்படி, ஐடிபிஐ வங்கியின்
பங்குகள் விற்பனை செய்யப்பட
உள்ளது. அந்த வங்கியில்
மத்திய அரசு மற்றும்
எல்ஐசி நிறுவனமும் இணைந்து
94% பங்குகளை வைத்துள்ளது.
அந்த
வங்கியில் புதிதாக பங்குகளை
வாங்கும் நிறுவனம் புதிய
தொழில்நுட்பத்துடன் வங்கியின்
வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். புதிய
நிறுவனம் வங்கியின் முடிவுகளுக்கு மத்திய அரசையும், எல்ஐசி
யையும் சார்ந்திருக்காது என்று
மத்திய அரசு அறிக்கையில் அறிவித்துள்ளது.