TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள்
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 4000 மருத்துவ
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் தகவல்
தமிழகத்தில் சுமார் 1,021 டாக்டர்கள் உள்பட
4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த
பணியிடங்களை நிரப்பும் வகையில்
தமிழக மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக
மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் சமீபத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சம் பயனாளிகளுக்கு முதலுதவி பெட்டியை வழங்குவதற்காக ராசிபுரம் தாலுகா போத
மலையில் உள்ள கெடமலைக்கு சென்றுள்ளார். ஏற்கனவே
ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
ஜம்புத்துமலை இடத்துக்கு காரில் சென்றார். பின்னர்
அங்கிருந்து கெடமலைக்கு சுமார்
4 கிலோ மீட்டர் தூரம்
நடை பயணம் மேற்கொண்டார்.
அப்போது
ஜம்புத்து மலையில் அமைச்சர்
மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் டாக்டர்
சண்முகவடிவு பணி வேலையின்
போது சுற்றுலா சென்றதாக
புகார் எழுந்துள்ளது . மேலும்
அங்கு பணியாற்றும் மற்றொரு
டாக்டர் தினகரன் என்பவர்
அவரது மகனை சட்டத்திற்கு புறம்பாக அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணி செய்ய
அனுமதியளித்தாகவும் புகார்
எழுந்துள்ளது. இதனால்
இந்த இரண்டு மருத்துவர்களையும் பணியிடை நீக்கம்
செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 1,021 மருத்துவர்கள் உள்பட
4 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக
தெரிவித்துள்ளார். இந்த
பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவ
தேர்வு வாரியத்தின் மூலம்
நிரப்பப்படும் என
தெரிவித்திருக்கிறார்.