ராஜுவும் 40 திருடர்களும்… டிஜிட்டல் மோசடி விழிப்புணர்வு குறித்த ரிசர்வ் வங்கி வெளியிட்ட புத்தகம் தெரியுமா?
இந்த கதைகளில் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவிதமான கதாப்பாத்திரம் வெவ்வேறு வயதில் அதாவது முதியோர், காவல் அதிகாரி, விவசாயி, மாணவர் என பல்வேறு பிரிவுகளில் வந்து கதை சொல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளதுமகாராஷ்டிரா மற்றும் கோவா ரிசர்வ் வங்கியி்ன் குறைதீர்ப்பு அதிகாரி சார்பில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிட்பட்டுள்ளது.
இந்தபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகள் , லிங்குகள் மூலம் மோசடி, கிரெட்டிகார்டு குறித்த போலி ஆஃபர், ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங், ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஸ் மூலம் மோசடி சிம் க்ளோனிங், க்யூஆர் கோட் மூலம் மோசடி, டேட்டா கேபிள் மூலம் தகவல்களைத் திருடுதல், லாட்டரி மோசடி, ஆன்லைன் வேலை மோசடி, கோவிட் பரிசோதனை குறித்த இணையதளம், போலியாக அழைப்பேசி அழைப்பு, வைபை பயன்படுத்தும்போது மோசடி, மெசேஜ் ஆப்ஸ் மோசடி, கடன்வழங்குவதாகக் கூறி மோசடி, கிரெடிட் கார்டு லிமிட் குறித்து மோசடி என ஏராளமான தலைப்புகளில் உள்ளன. இந்த புத்தகம் ஆங்கிலம், இந்தி, மராத்தி மொழிகளில் வந்துள்ளது