தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கு வாகனங்கள் வாங்குவதற்கு 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கு வாகனங்கள் வாங்குவதற்கு 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த, சுயத் தொழில் தொடங்க ஆா்வமுள்ள, முதல் தலைமுறைத் தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நாமக்கல் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டமானது 2012-13 ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த திட்டத் தொகை ரூ. 10 லட்சத்துக்கு மேலும் ரூ. 5 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.
மானியம் திட்டத்தொகையில் 25 சதவீதம் பட்டியலின வகுப்பினருக்கும், பழங்குடியினத்தவா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் மானியமாக திட்டத் தொகையில் 10 சதவீதமும் வழங்கப்படுகின்றன. மானிய உச்ச வரம்பு ரூ. 75 லட்சமாகும். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் பயனுற குறைந்தபட்சம் பிளஸ் 2 தோச்சி மற்றும் பட்டம், பட்டயம், தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21-க்கு குறையாமல் இருக்க வேண்டும். உச்சவரம்பு பொதுப் பிரிவினருக்கு 35 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினா் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபா் மட்டுமின்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோா் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரா் அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
முதலீட்டாளா் பங்கு பொதுப் பிரிவினருக்கு திட்டத் தொகையில் 10 சதவீதம், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதம் செலுத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த தகுதி பெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினா் ஆட்டோ, காா், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பேருந்து, சரக்கு போக்குவரத்துக்கான லாரிகள் போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35 சதவீதம் தனி நபா் மானியமும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதுமாக 3 சதவீத வட்டி மானியமும் பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04286-281151, 281251 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.