Thursday, December 19, 2024
HomeBlogதிருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கருணைக்கொடையாக ரூபாய் 3,000 - தமிழக முதல்வர்
- Advertisment -

திருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கருணைக்கொடையாக ரூபாய் 3,000 – தமிழக முதல்வர்

3,000 rupees as a kind gift to the workers working in the temples - Tamil Nadu Chief Minister

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

திருக்கோயில்களில்
பணியாற்றும்
பணியாளர்களுக்கு
கருணைக்கொடையாக
ரூபாய்
3,000 –
தமிழக
முதல்வர்

இந்துமத திருக்கோயில்
பணியாளர்களுக்கு
வழங்கப்படும்
அகவிலைப்படி
34%
லிருந்து,
38%-
ஆக
உயர்த்தி
வழங்கவும்,
அறநிலையத்
துறையின்
கட்டுப்பாட்டில்
உள்ள
இந்துமத
திருக்கோயில்களில்
பணியாற்றும்
அனைத்து
பணியாளர்களுக்கும்
கருணைக்கொடையாக
ரூபாய்
3,000
வழங்கவும்
தமிழக
முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

திருக்கோயில்களின்
ஓய்வு
பெற்ற
அர்ச்சகர்கள்,
பட்டாச்சாரியார்கள்,
இசைக்
கலைஞர்கள்
போன்றவர்களுக்கு
வழங்கப்பட்டு
வந்த
ஓய்வூதியம்
ரூ.1,000- ரூ.3,000 ஆக உயர்த்தியும்,
கிராமக்
கோயில்
பூசாரிகளுக்கான
ஓய்வூதியம்
ரூ.3,000- ரூ.4,000 ஆக உயர்த்தியும்
வழங்க
ஆணையிடப்பட்டது.திருக்கோயிலில்
பக்தர்கள்
முடி
காணிக்கை
செலுத்துவதற்கான
கட்டணம்
விலக்களித்து,
அப்பணியை
மேற்கொள்ளும்
நபர்களுக்கு
மாதந்தோறும்
ரூ.5,000
ஊக்கத்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
திருக்கோயில்
அர்ச்சகர்கள்
மற்றும்
இதர
பணியாளர்களுக்கு
பொங்கல்
திருநாளை
முன்னிட்டு
இரண்டு
இணை
புத்தாடைகள்
வழங்கப்பட்டு
வருகிறது.

தற்போது அரசுப் பணியாளர்களுக்கு
அகவிலைப்படி
உயர்த்தி
வழங்கப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து,
இந்து
சமய
அறநிலையத்
துறையின்
கட்டுப்பாட்டிலுள்ள
ரூபாய்
ஒரு
லட்சம்
மற்றும்
அதற்கு
மேல்
ஆண்டு
வருவாய்
வரப்பெறும்
திருக்கோயில்களில்
பணிபுரிந்து
வரும்
நிரந்தர
பணியாளர்களுக்கு
01.01.2023
முதல்
அகவிலைப்படியை
34
விழுக்காட்டிலிருந்து,
38
விழுக்காடாக
உயர்த்தி
வழங்க
தமிழக
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், சுமார் 10,000 திருக்கோயில்
பணியாளர்களின்
வாழ்வாதாரம்
மேம்படும்.
இதனால்,
ஆண்டொன்றுக்கு
ரூபாய்
7
கோடி
கூடுதல்
செலவினம்
ஏற்படும்.

மேலும், அரசுப் பணியாளர்களுக்கு
பொங்கல்
திருநாளை
முன்னிட்டு
சிறப்பு
மிகை
ஊதியம்
வழங்கப்படுவதுபோல்,
இந்து
சமய
அறநிலையத்துறையின்
கட்டுப்பாட்டில்
உள்ள
திருக்கோயில்களில்
பணியாற்றும்
முழுநேரம்,
பகுதிநேரம்,
தொகுப்பூதியம்,
தினக்கூலி
பணியாளர்கள்
உள்ளிட்ட
அனைத்து
பணியாளர்களுக்கும்
ரூ.2,000-
ஆக
வழங்கப்பட்டு
வந்த
பொங்கல்
கருணைக்கொடை
இவ்வாண்டில்
ரூ.3,000-
ஆக
உயர்த்தி
வழங்கிட
தமிழக
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
இதனால்,
இவ்வாண்டு
ரூ.
1.5
கோடி
கூடுதல்
செலவினம்
ஏற்படும்.

இந்த அறிவிப்புகள்
திருக்கோயில்
பணியாளர்களுக்கு
மகிழ்ச்சியை
அளிப்பதோடு,
தமிழர்
திருநாளாம்
பொங்கல்
பண்டிகையை
அவர்தம்
குடும்பத்தாரோடு
உற்சாகமாக
கொண்டாடிட
வழிவகை
ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -