விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்: மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்க தகுதியான பயனாளிகள் விண்ணப்பம் அளிக்கலாம்.
விண்ணப்பத்துடன் ரூ.72 ஆயிரத்திற்குள் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் பெற்ற தையல் பயிற்சி சான்று, வயது 20 முதல் 40க்குள், சாதிச்சான்று, விண்ணப்பதாரர் பாஸ்போட் சைஸ் புகைப்படம் 2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கு சான்று, ஆதார் அடையாள அட்டை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை செப்.30க்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.