12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகள் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
- வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட் என்னும் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது
- தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத் தேர்வுகளில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தக்கூடாது
- லேபில் பயன்படுத்தும்போது கிருமிநாசினிகள் ஆய்வகத்தில் எரியும் தன்மை உள்ள பொருட்களின் அருகே வைக்க வேண்டாம்
- செய்முறை தேர்வின்போது ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
- தேர்வுக்கு செல்வதற்கு முன் கைகளை சோப்பு கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
- தேர்வு முடிந்த பிறகும் மாணவர்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்
- இயற்பியல், வேதியல், கணிப்பொறியியல், தாவரவியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ம் தேதி நடைபெறும்.
- செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஆய்வக அறையில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அருகில் சானிடைசர் வைக்கக்கூடாது.
- கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.
- நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் செய்முறை தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் இருந்தால் வேறு பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்தி கொள்ளலாம்.
- கொரோனா பரவலை தடுக்க செய்முறை கூடத்தில் PIPETTE பதிலாக BURETTE பயன்படுத்தி கொள்ளலாம்.
- மாணவர்கள் கிருமிநாசினி சானிட்டைசர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துகொள்ளவேண்டும்.
- முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
கொரனா தொற்று அதிகரித்து நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை கல்வி துறை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை.ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட +2 தேர்வுகள் ரத்து செய்யப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கேள இருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் +2 மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவேளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கிருமிநாசினிமற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது, நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.இதுபோன்ற 21 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.