6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் இடையே அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை ஆண்டுக்கு ரூபாய் 6000 உதவித்தொகை வழங்க இருக்கிறது. இதற்கு பள்ளியில் உள்ள அஞ்சல் தலை சேகரிக்கும் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது மாணவர் தனது சொந்த அஞ்சல் தலை வைப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். உதவித்தொகை பெற இரண்டு நிலைகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதலில் அஞ்சல் தலை தொடர்பான எழுத்து வினாடி வினா வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடத்தப்படும்.
அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், இறுதித் தேர்வுக்கான அஞ்சல் தலை திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் https://tamilnadupost.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பங்களை ‘அஞ்சல் தலைவர், மத்திய மண்டலம் திருச்சி – 620001’ என்ற முகவரிக்கு வருகிற 29ஆம் தேதிக்கு முன்னர் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here