போட்டிக்கான கடிதத்தை புதிய இந்தியவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை தபால் துறை தலைவர் தமிழ்நாடு வட்டம், சென்னை – 600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இன்லேண்ட் லெட்டரில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடிதத்தின் உரை பிரிவில் எழுதுவோர் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இப்போட்டியில் 18 வயது, அதற்கு கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாக பிறப்பு சான்று இணைக்க வேண்டும். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்குமுதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் இடம் ரூ.10 ஆயிரம், 3ம் இடம் ரூ.5000 வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு வணிக அதிகாரியை 94431 39982 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.