தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம்
– முதல்வர்
தமிழக
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு
எண்ணிக்கை மே மாதம்
2 ஆம் தேதி நடைபெற
உள்ளது. இந்நிலையில் அனைத்து
அரசு அலுவலர்களும் தேர்தல்
ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
வந்துள்ளது.
பல
முன்னணி அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கான பல
நல திட்டங்களை அறிவித்து
வருகின்றனர். அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில்
வீதியில் இறங்கி வாக்கு
சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நான்குனேரி தொகுதியில் நிற்கும் அதிமுக வேட்பாளர் தச்சை என்,கணேசராஜாவை ஆதரித்து பேசிய முதல்வர் கூறுகையில்:
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல்
1 ஆம் தேதி முதல்
மும்முனை மின்சாரம் 24 மணி
நேரமும் வழங்கப்பட உள்ளது.
மேலும் மீண்டும் எங்களது
கட்சி ஆட்சிக்கு வந்தால்
6 கேஸ் சிலிண்டர் மற்றும்
சோலார் அடுப்பு வழங்கப்படும்.
ஏழை
மக்களுக்கு வழங்கப்படும் 100 நாள்
வேலை திட்டம் 150 நாளாக
அறிவிக்கப்படும். மாதம்
தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1500
வழங்கப்படும். ரேஷன்
பொருள்கள் வீடு தேடி
வந்து வழங்கப்படும். இரு
சக்கர வாகனங்களுக்கான உரிம
கட்டணம் அரசே செலுத்தும்.