
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து வரும் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஈரோடு மாவட்டத்தைச் சோந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோா், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவா்கள் ஈரோடு, கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், இரண்டாம் தளத்தில் உள்ள பயிற்சி நிலைய அலுவலகத்தை நேரில் அல்லது 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவுசெய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

