சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் சணல் பை, பைல்கள், பணப் பை போன்றவை தயாரிப்புக்கான இலவச பயிற்சி ஜூலை 14 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 13 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராமப் பகுதியை சோ்ந்த, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவா், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள் குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் ஈரோடு, கொல்லம்பாளையம், பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2ஆம் தளத்தில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 87783 23213 என்ற கைப்பசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.